உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காடு விடுதிகளில் போலீசார் சோதனை

ஏற்காடு விடுதிகளில் போலீசார் சோதனை

ஏற்காடு, ஏற்காட்டில் உள்ள விடுதிகளில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.முக்கிய சுற்றுலா தலமாக ஏற்காடு இருப்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்கி ஏற்காட்டை சுற்றி பார்க்க வசதியாக நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் உள்ளன. வேறு இடங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஏற்காடு வந்து சுற்றுலா பயணிகள் போர்வையில், விடுதிகளில் தங்கி விடுகின்றனர். இதனால், விடுதியில் தங்க வருபவர்களின் முழு விபரத்தையும் வாங்கிய பின்தான், அறை கொடுக்க வேண்டும் என, போலீசார் விடுதி உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். அதை தொடர்ந்து, நேற்று தங்கும் விடுதிகளுக்கு சென்று, பதிவேடுகள் முறையாக உள்ளதா என, எஸ்.ஐ., மைக்கேல் ஆண்டனி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை