சிறுவர்கள் மாயம் போலீசார் தேடல்
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன், பக்கத்து ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.அவரது வீடு அருகே வசிக்கும், 16 வயது சிறுவன், கட்டட வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். வீடு திரும்பவில்லை. நேற்று, பெற்றோர் அளித்த புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார், இரு சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.