உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாதையில் ரீல்ஸ் 4 பேரை எச்சரித்த போலீஸ்

மலைப்பாதையில் ரீல்ஸ் 4 பேரை எச்சரித்த போலீஸ்

ஏற்காடு, ஏற்காட்டுக்கு, சில நாட்களுக்கு முன் விலை உயர்ந்த பைக்குகளில் சுற்றுலா வந்த இளைஞர்கள், மலைப்பாதையில் எச்சரிக்கை பலகைகளை உடைத்து, சாலையில் விளையாடியதை, 'ரீல்ஸ்' ஆக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அந்த வீடியோ பரவியதால், நெடுஞ்சாலை துறையினர், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்படி, சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், 'சிம்பாசிவா' எனும், 'ஐடி'யில், வீடியோவை வெளியிட்டது, அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த சிவா என தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தில், அச்செயலில் ஈடுபட்டது, அரியலுாரை சேர்ந்த சிவா, 23, ஆகாஷ், 21, பிரவீன், 21, கார்த்திக், 19, அரவிந்த், 21, ஆகிய பட்டதாரிகள் என தெரிந்தது.அவர்களை கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர். பின், அவர்களின் எதிர்காலம் கருதி, அவர்களது பெற்றோர்களை வரவழைத்து, உரிய அறிவுரை கூறி, போலீஸ் ஜாமினில் வீட்டுக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ