உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு

சேலம்,: சேலம், மேட்டுப்பட்டி, ஜே.ஜே.காலனியை சேர்ந்த, ஆறுமுகம் மகன் கோகுல்நாத், 18. ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாண்டு படித்தார். அயோத்தியாபட்டணத்தில் உள்ள சாக்லெட் கடையில், பகுதி நேர வேலை பார்த்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, 'வீகோ' மொபட்டில், ராயல் பார்க் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது மொபட் பின்புறம், அரசு பஸ் மோதியதில் நிலை தடுமாறி கோகுல்நாத் விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏற, உடல் நசுங்கி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி