தமிழ்நாடு கிராம வங்கியில் பொங்கல் கொண்டாட்டம்
சேலம்,: சேலம், அஸ்தம்பட்டி, ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவில், தமிழ்நாடு கிராம வங்கியின் சேர்மன் மணி சுப்ரமணியன், பொது மேலாளர்கள் குமார், வாசுதேவன் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவின்போது தமிழ்நாடு கிராம வங்கி சேர்மன் மணி சுப்ரமணியன் கூறுகையில், 'தமிழ்நாடு கிராம வங்கி முழுமையான அரசு வங்கி. அற்புதம் 555 என்ற புதிய வைப்புத்தொகை திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்படும் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரையிலான தொகைக்கு மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம், இதர வாடிக்கையாளர்களுக்கு 7.75 சதவீதம் சிறப்பு வட்டி வழங்கப்படுகிறது.வீட்டுக் கடன், தொழில் வியாபார கடன், வாகன கடன், நகைக்கடன் மற்றும் அனைத்து கடன்களும் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., வசதிகள் உள்ளன. டி.என்.ஜி.பி. ட்ரீட் மொபைல் பேங்கிங் ஆப்பை ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்' என தெரிவித்தார்.