உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆற்றில் பாறை விநாயகருக்கு பூஜை

ஆற்றில் பாறை விநாயகருக்கு பூஜை

வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் எதிரே திருமணி-முத்தாற்றில் பெரிய பாறையில், 2 அடிக்கு, 2 அடி சதுர மாட வடிவில் குடைந்து அதில் விநாயகரை புடைப்பு சிற்பமாக வடித்-திருந்தனர். அந்த பிள்ளையார் மீது குப்பை கொட்டி தீ வைத்து எரித்ததால் கல் மண்டபம் இடிந்து கழிவில் புதைந்து கிடந்தது. கடந்த ஆக., 24ல் பக்தர்கள் இணைந்து, அங்கிருந்த குப்பையை, பொக்லைன் மூலம் அகற்றி சுத்தம் செய்தனர். தொடர்ந்து ஆற்றில் உள்ள அக்கோவிலுக்கு செல்ல, கரையில் கருங்கற்களை வெட்டி படிக்கட்டுகளும் இருந்தன.உடனே விநாயகருக்கு அபி ேஷகம் செய்து வழிபட்டனர். அதேநேரம் சிலை வடிக்கப்பட்டுள்ள பாறையை சுற்றி நீர் ஊறிக்-கொண்டிருப்பதால் சிலை தினமும் மூழ்கும் நிலை இருந்தது.இந்நிலையில் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் பக்-தர்கள், கரையில் உள்ள படிக்கட்டுகள் இருபுறமும் கைப்பிடி கம்-பிகள் அமைத்து, சிலை மூழ்குவதை தற்காலிகமாக தடுத்தனர். நேற்று காலை விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்பட, 16 வகை பொருட்களால் அபி ேஷகம் செய்து அலங்கரித்து எருக்கம் பூ மாலை அணிவித்தனர். அவுல் சுண்டல், கொழுக்-கட்டை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை படையலிட்டு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ