உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தபால் ஆபீஸ்களில் ஆக.,2ல் பரிவர்த்தனை இல்லா நாள்

தபால் ஆபீஸ்களில் ஆக.,2ல் பரிவர்த்தனை இல்லா நாள்

சேலம், தமிழகத்தில் உள்ள தபால் அலுவலகங்களில், வரும் ஆக.2ம் தேதி , மென்பொருள் தரம் உயர்த்தும் பணி நடக்க உள்ளதால், அன்று, 'பரிவர்த்தனை இல்லாத நாள்' என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், பயன்பாட்டில் உள்ள மென்பொருள் புதிய தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தும் பணிகள் ஆக.,2ல் நடக்கவுள்ளது. அன்று ஒரு நாள் அனைத்து தபால் அலுவலகங்களிலும், 'பரிவர்த்தனை இல்லா நாள்' என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிறுசேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பது, முதலீடு செய்வது போன்ற எந்தவிதமான பண பரிவர்த்தனைகளும், விரைவு தபால், பதிவு தபால், ஆதார் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் செய்ய இயலாது.சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தனலட்சுமி, கிழக்கு கோட்ட கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் ஆகியோர் இதை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி