உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரம் தாக்கி மின்பாதை இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி மின்பாதை இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

சேலம், சேலம், சின்னதிருப்பதி பாரதி நகரை சேர்ந்தவர் துரைசாமி, 55. இவர் மின்சார துறையில் மின்பாதை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரும், இவருடன் பணிபுரியும் நாகலிங்கம் என்பவரும் நேற்று மதியம், 12:30 மணிக்கு சின்னதிருப்பதி குமரன் நகருக்கு சென்றனர். அங்குள்ள, 15 அடி உயர டிரான்ஸ்பார்மரில் துரைசாமி ஏறி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.நாகலிங்கம் அருகில் இருந்த முட்புதரை வெட்டுவதற்கு, கத்தி வாங்க அருகில் இருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, டிரான்ஸ்பார்மரில் இருந்த மின்சாரம், துரைசாமி மீது தாக்கியதில் அவர் துாக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார், உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், துரைசாமி வேலை பார்த்து வந்த டிரான்ஸ்பார்மர் மின்சாரம் ஆப் செய்யாமல் இருந்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை