மேலும் செய்திகள்
சேலம் மாவட்டம் முழுதும் இடி, மின்னலுடன் கனமழை
08-May-2025
பனமரத்துப்பட்டி,: பனமரத்துப்பட்டி, மல்லுார் பகுதிகளில் நேற்று மாலை, 5:30 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து, 6:30 மணிக்கு கன மழை கொட்டியது. இதனால் மின்தடை ஏற்பட்டது. இடைவிடாமல் பெய்த மழை, மின்னலால், மின்சாரம் வந்து வந்து சென்றது. இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இரவு, 7:40 மணிக்கு மழை விட்ட பின், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல் நேற்று இரவு, 7:00 மணிக்கு வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், காரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
08-May-2025