மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
12-May-2025
Match ஒன்று Qualifiers மூன்று DCvsGT
19-May-2025
சேலம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அரசின் சாதனை விளக்க பிரதிகள் வழங்கும் நிகழ்வு வரும், 24, ௨௫ல் நடக்கிறது.இதுகுறித்து மேற்கு மாவட்ட செயலரும், எம்.பி.,யுமான செல்வகணபதி கூறியதாவது;வரும், 24, 25ல், பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், சங்ககிரிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், இடைப்பாடிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றியம், கிழக்கு ஒன்றியம், கொங்கணாபுரத்திற்கு உட்பட்ட தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம்.மேட்டூர் நகரம், கொளத்துார் ஒன்றியம், இடைப்பாடி நகரம், நங்கவள்ளிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம், மத்திய ஒன்றியம், தெற்கு ஒன்றியம், தாரமங்கலம் மேற்கு ஒன்றியம், தாரமங்கலம் நகரம், மகுடஞ்சாவடிக்குட்பட்ட தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், மேச்சேரிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், இடங்கணசாலை நகரம், சங்ககிரி நகரம் ஆகிய பகுதிகளுக்கு அந்தந்த பொறுப்பாளர்களுடைய மேற்பார்வையில், சாதனை விளக்க பிரதிகளை வீடு வீடாக சென்று மக்களிடம் சேர்க்க வேண்டும்.இந்நிகழ்வுக்கு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க.. செயலரும், எம்.பி.,யுமான செல்வகணபதி தலைமை வகிக்கிறார். இடைப்பாடி தொகுதி பார்வையாளர், -மாநில வர்த்தக அணி இணை செயலர் முருகவேல், சங்ககிரி தொகுதி பார்வையாளர், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலர் செந்தில்குமார், மேட்டூர் தொகுதி பார்வையாளர், மாநில மகளிர் அணி சமூகவலைதள பொறுப்பாளர் ரியா முன்னிலை வகிக்கின்றனர். இதில் ஒன்றிய, நகர, பேரூர், வார்டு செயலர்கள், நிர்வாகிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
12-May-2025
19-May-2025