உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிரதமர் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குனர் மோகன சரிதா அறிக்கை:கெங்கவல்லி வட்டாரத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் மக்காச்சோளம், நெல், பருத்தி போன்ற பயிர்களுக்கு வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி காற்று போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு பயிர் காப்பீட்டு தொகை பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. பட்டாதாரர், குத்தகை விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.விவசாயிகள், முன்மொழிவு படிவத்துடன் சிட்டா, அடங்கல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு, ஆதார் நகல் போன்ற ஆவணங்களுடன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், வணிக வங்கிகள், பொது இ - சேவை மையங்கள் மூலம் உரிய பிரீமிய தொகையை செலுத்தி காப்பீடு செய்யலாம்.மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு, 482 ரூபாய், பருத்திக்கு, 650, நெல்லுக்கு, 568 ரூபாய் பிரீமிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகை செலுத்த கடைசி நாள், பருத்தி, மக்காச்சோளத்துக்கு வரும், 31. நெல் பயிருக்கு, நவ., 15 வரை செலுத்தலாம்.விபரங்களுக்கு, சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்கள் அல்லது கெங்கவல்லி, தம்மம்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை