சிறை உதவியாளர் சஸ்பெண்ட்
சேலம்:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தண்டனை கைதி செல்வராஜ், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம், ஐகோர்ட் அனுமதி பெற்று, 21 நாட்கள் பரோலில் சென்றார். பரோல் முடிந்த பின் தலைமறைவானார். கடந்த, 21ல் சிறைக்கு வருவதற்கான கெடு முடிந்த நிலையில், 22ல் தான் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முளசி ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டு, செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.ஆனால் பரோலில் சென்ற கைதி, உரிய நேரத்தில் திரும்பாதது குறித்து உடனே தகவல் தெரிவிக்காத, தண்டனை குறைப்பு அலுவலக இளநிலை உதவியாளர் நாகராஜை, 'சஸ்பெண்ட்' செய்து, சிறை எஸ்.பி., வினோத், நேற்று முன்தினம் உத்தரவிட்டார். மேலும் அதே பிரிவில் பணிபுரிந்த ஒருவருக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.