ஜி.ஹெச்.,ல் கைதி அனுமதி
சேலம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ரமேஷ், 30. இவர் கடந்த, 2023ல் நடந்த கொலை வழக்கு ஒன்றில், பள்ளிப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ரமேஷூக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.