சொத்து வரியை செப்.,30க்குள் செலுத்த வேண்டும்; கமிஷனர்
ஆத்துார், ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆத்துார் நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், நடப்பாண்டிற்கான இறுதி அரையாண்டு சொத்துவரியை செப்., 30க்குள் செலுத்த வேண்டும். வரி வசூலிப்பாளர்கள், காசோலை மற்றும் இணையதள முகவரி https://tnurbanepay.tn.gov.inமூலமாக வரியை செலுத்தலாம். செப்.,30க்குள் வரியை செலுத்தி தனி வட்டி விதிப்பு தவிர்க்கலாம். மேலும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, நகராட்சி கடை வாடகை மற்றும் தொழில் உரிமக் கட்டணங்கள் ஆகியவை செலுத்தும்படி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.