உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கல்லால் மனைவியை தாக்கியவருக்கு காப்பு

கல்லால் மனைவியை தாக்கியவருக்கு காப்பு

ஓமலுார், ஓமலுார் அருகே வேலாகவுண்டனுாரை சேர்ந்த, கூலித்தொழிலாளி சங்கர், 38. இவரது மனைவி மது, 36. துணிக்கடையில் பணிபுரிகிறார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். 'குடி'ப்பழக்கம் கொண்ட சங்கர், அடிக்கடி வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 20 இரவு மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சங்கர், 'டைல்ஸ்' கல்லை எடுத்து, மனைவியில் தலையில் அடித்துள்ளார். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, ஓமலுார் போலீசார் நேற்று, சங்கரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ