தேர்தல் கமிஷனை கண்டித்து போராட்டம்
தாரமங்கலம், பாஜ.,வுக்கு உடந்தையாக இருக்கும் தேர்தல் கமிஷனை கண்டித்து, காங்., கட்சியின், சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், தாரமங்கலத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெய்குமார் தலைமை வகித்தார். காந்தி சிலையில் இருந்து கட்சியினர், மெழுகுவர்த்தி ஏந்தி, 'ஓட்டு திருடனே பதவி விலகு' என கோஷம் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். முக்கிய சாலை வழியே சென்று, தபால் நிலைய பகுதியில் நிறைவு செய்தனர். முன்னாள் தலைவர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., அருணாசலம், வட்டார தலைவர்கள் ரத்தினம், முத்துசாமி பங்கேற்றனர்.சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார், உடையார்பாளையத்தில், தலைவர் அர்த்தனாரி தலைமையில் ஊர்வலம் நடந்தது.