காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் இடைப்பாடி, டிச. 10- காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து செயல் படுத்த வேண்டும், ஏரியின் வாய்க்கால்களை துார்வார வேண்டும், வெள்ளாளபுரம் ஏரியில் வீணாக வெளியேறும் உபரி நீரை வறண்ட ஏரி களுக்கு நிரப்ப வலியுறுத்தியும், இடைப்பாடி அருகே பொம்மசத்திரம் ஏரியின் முன், காவிரி உபரிநீர் நடவடிக்கை குழுவை சேர்ந்த, 100க்கும் மேற
காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்துசெயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்இடைப்பாடி, டிச. 10-காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், ஏரியின் வாய்க்கால்களை துார்வார வேண்டும், வெள்ளாளபுரம் ஏரியில் வீணாக வெளியேறும் உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தியும், இடைப்பாடி அருகே பொம்மசத்திரம் ஏரியின் முன், காவிரி உபரிநீர் நடவடிக்கை குழுவை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன் தலைமை வகித்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புயல் மழை காரணமாக, ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி, 10 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்துள்ளது. சரபங்கா வடகரை கால்வாய் வழியாக செல்லும் உபரி நீர், விவசாயிகளுக்கு பயன்படாமல் தேவூர் செட்டிப்பட்டி சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் உப்பாரப்பட்டி கலுங்கு, புதுப்பாளையம் கலுங்கு, வேம்பனேரி கலுங்கு ஆகியவற்றின் உயரத்தை உயர்த்தி, நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். உயர்நீதிமன்றம், ஜூலை மாதம் உபரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.வாய்க்கால்களை துார்வாராமல், பொதுப்பணித்துறை மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது. அதேபோல், மேட்டூர் உபரிநீர் திட்டம், இதற்கான கால்வாய் பணி, பைப் லைன் அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். வெள்ளாளபுரம் ஏரியில் தண்ணீரை பம்ப் செய்திருந்தால், 50 வறண்ட ஏரிகளை நிரப்பி இருக்கலாம். ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகும் போது, விதிகளை பார்க்காமல் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஏரிகளை நிரப்ப வேண்டும். கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு கூறினார்.