வாக்காளர் திருத்த சட்டத்தை அமல்படுத்த ஆர்ப்பாட்டம்
சேலம்: நா.த.க., சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கொள்கை பரப்பு செயலர் அருள் இனியவன் தலைமை வகித்தார். அதில் ஒட்டன்சத்தி-ரத்தில் சரவணன் என்பவர் வடமாநிலத்தவர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத்தரக்கோரியும் வலியுறுத்தினர்.மேலும் தமிழக அரசு உள் நுழைவுச்சீட்டு முறையை கொண்டு வருவதோடு, தமிழரையும், தமிழகத்தையும் காக்க, மத்திய, மாநில அரசுகள், உடனே வாக்காளர் திருத்த சட்டத்தை அமல்ப-டுத்த கோஷம் எழுப்பினர். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேஷ், தீபக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்-றனர்.