காருவள்ளி வெங்கட்ரமணர் கோவிலில் அக்., 19ல் புரட்டாசி தேரோட்டம்
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, காருவள்ளி சின்னதிருப்ப-தியில் உள்ள, பழமையான வெங்கட்ரமணர் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் மூலவருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடக்கும். அதன்படி, இன்று முதல் புரட்டாசி திருவிழா தொடங்குகிறது. மேலும், 5வது சனியில் தேரோட்டம் நடத்தப்படும்.இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் நைனாகுமார் கூறுகையில், ''புரட்டாசியில் வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்-ளன. வளாகம் முழுதும் கண்காணிப்பு கேமரா பொருத்தி தீவிர-மாக கண்காணிக்கப்பட உள்ளது,'' என்றார்.செயல் அலுவலர் சரண்யா கூறுகையில், ''இலவச பொது தரி-சனம், 20, 100 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு தனித்தனி வழிகள் உள்ளன. தேவையான இடங்களில் குடிநீர் வசதி ஏற்ப-டுத்தப்பட்டுள்ளது. 5வது வாரமான, அக்., 19ல் புரட்டாசி தேரோட்டம் நடக்க உள்ளது,'' என்றார்.