மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
26-Apr-2025
சேலம்:சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்வ விழா கடந்த ஏப்., 25ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவில், பெருமாள் விதவித அலங்காரங்களில் வீதி உலா வருகிறார். நேற்று அக் ஷய திரிதியை என்பதால், மாலை, 5:30 மணிக்கு சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சவுந்தரராஜருக்கு, கூடை கூடையாக வண்ண மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று காலை, 10:00 மணிக்கு உபயநாச்சியார்களுடன் பெருமாளுக்கு சூர்ணோத்சவம் நடக்கிறது. 2 காலை வெண்ணெய்தாழி சேவை, 3ல் திருத்தேர், தீர்த்தவாரி, 4ல் திருக்கல்யாணம், 6ல் சப்தாவரணத்துடன் விழா நிறைவு பெறும்.16 வகை அபிேஷகம்தலைவாசல் அருகே வீரகனுார், தென்கரை கங்காசவுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட, 16 வகை சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. அம்மன் சிலைக்கு முன், ரூபாய் நோட்டுகள், வெள்ளி, தங்க ஆபரணங்கள், மா, வாழை, அன்னாசி, பலா, தர்பூசணி உள்பட பல்வேறு பழங்கள் வைத்து படைக்கப்பட்டது.அதேபோல் ஆத்துார் வெள்ளை விநாயகர், கைலாசநாதர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
26-Apr-2025