ஏற்காட்டில் மீண்டும் பனிமூட்டத்துடன் மழை
ஏற்காடு: ஏற்காட்டில் ஒரு வாரத்துக்கு முன், 15 நாட்களாக பனி மூட்டத்துடன் கூடிய மழை பெய்தது. கடந்த வாரம் தான் வெயில் தென்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் முதல், ஏற்காடு அதன் சுற்றுப்பகுதிகளில் பனி மூட்டத்துடன் மழை பெய்தது. இதனால் ஏற்காடு முழுதும் கடுங்குளிர் நிலவியது. 5 அடியில் வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை. இதனால் முகப்பு விளக்குளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர். இந்த பனிமூட்டம், மழையால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. குளிர் தாக்கமும் அதிகமாக இருந்தது.