உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெ.நா.பாளையம் ஆத்துாரில் மழை

பெ.நா.பாளையம் ஆத்துாரில் மழை

ஆத்துார், ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சாலை, தெருக்களில் மழை நீர் ஓடியது. ஆத்துார், நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், தென்னங்குடிபாளையம், கொத்தாம்பாடி, அம்மம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தும்பல், புத்திரகவுண்டன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !