மேலும் செய்திகள்
பகலில் பெய்த மழை வியாபாரிகள் பாதிப்பு
15-Nov-2024
சேலம்: தொடர் மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.,3) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பெஞ்சல் புயல் காரணமாக, நேற்று முன்தினம் சேலம் மாவட்-டத்தில் பரவலாக மழை பெய்ததால் திங்கட்கிழமை பள்ளிக-ளுக்கு கலெக்டர் விடுமுறை அறிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று காலை மழை நின்ற நிலையில் மதியம், 12:00 மணியளவில் மீண்டும் பெய்ய தொடங்கியது. இதன் காரண-மாக அம்மாபேட்டை அல்லிக்குட்டை ஏரி, கன்னங்குறிச்சி புதிய ஏரி ஆகியவை நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்து ஓடுகிறது.நேற்று இரவு, 8:30 மணிக்கு துவங்கிய மழை, 10:30 மணி வரை நீடித்தது. இதனால் புது பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லுாரி சாலை-களில் நேற்று இரவு மழை நீர் வெள்ளம்போல் ஓடியது.இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், சேலம் மாவட்-டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
15-Nov-2024