உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலி ஆயில் விற்பனை ராஜஸ்தான் வாலிபர் கைது

போலி ஆயில் விற்பனை ராஜஸ்தான் வாலிபர் கைது

சேலம், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் கெஜலட்சுமி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் மகுடஞ்சாவடியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடையில், வேறு நிறுவனத்திடம் வாங்கப்பட்ட வாகன ஆயிலை, பிரபல நிறுவனம் பெயரில் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில், அந்த கடை உரிமையாளர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பூமா ராம், 30, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், தலா, 20 லிட்டர் கொண்ட, 20 ஆயில் டிரம், 13 காலி டிரம்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 27,000 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ