இன்று ரேஷன் குறைதீர் முகாம்
சேலம்: சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடக்கிறது. அதில் நுகர்வோர், பொது வினியோகம் தொடர்பான குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு பெறலாம். குறிப்பாக ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்வதற்கான மனு மீதும் நடவடிக்கை உண்டு.ரேஷன் கடைகளின் செயல்பாடு, அத்யாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார் இருப்பின் தெரிவிக்கலாம்.தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவைகள் தொடர்பான குறைகள் குறித்த புகார்கள் தெரிவித்தாலும் தீர்வு காணப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.