உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் கடை இடமாற்றம்

ரேஷன் கடை இடமாற்றம்

பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டியில், 1,500 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள ரேஷன் கடை கட்டடம் சேதம் அடைந்துள்ளது.அதனால் முருகன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டது. அதன் மேற்கூரை சேதமடைந்து, மழைநீர் கொட்டியது. இதனால், ஏ.டி.சி., நகரில், தனியார் வாடகை கட்டடத்துக்கு ரேஷன் கடை இடமாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'எஸ்.கே.சிட்டியில் ரேஷன் கடை கட்டும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. அப்பணியை விரைவாக முடித்தால், வாடகை கட்டடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி