உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செஞ்சிலுவை அலுவலருக்கு புத்தாக்க பயிற்சி வழங்கல்

செஞ்சிலுவை அலுவலருக்கு புத்தாக்க பயிற்சி வழங்கல்

ஓமலுார், இந்திய செஞ்சிலுவை சங்க தமிழக கிளை, சேலம் பெரியார் பல்கலை இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து, செஞ்சிலுவை திட்ட அதிகாரி களுக்கு ஒரு நாள் புத்தாக்கப்பயிற்சியை, பல்கலையில் நேற்று முன்தினம் நடத்தின. மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சேலம் மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா, பயிற்சி அளித்தார். மேலும் ரத்த தான சிறப்பு, நெருக்கடி காலத்தில் செஞ்சிலுவை சங்க பணி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சேலம், கிருஷ்ண கிரி, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த செஞ்சிலுவை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ