உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரைவரை கத்தியால் குத்திய உறவினர் கைது

டிரைவரை கத்தியால் குத்திய உறவினர் கைது

வாழப்பாடி: வாழப்பாடி, சந்திரபிள்ளை வலசு, மாரியம்மன் கோவிலில் விழா நடத்துவது தொடர்பாக, மக்கள் கருத்து கேட்பு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வேல்முருகன், 42, அவரது தங்கை கணவரான, ஆட்டோ டிரைவர் சுரேஷ், 43, ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சுரேஷ், கத்தியால் வேல்முருகனை குத்தியதில் படுகாயம் அடைந்த அவர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொலை முயற்சி உள்பட, 4 பிரிவுகளில், வாழப்பாடி போலீசார், சுரேைஷ நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ