உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவர்கள் உடலை வாங்க உறவினர் மறுப்பு சுற்றுலாத்துறை அமைச்சர் ரூ.3 லட்சம் உதவி

மாணவர்கள் உடலை வாங்க உறவினர் மறுப்பு சுற்றுலாத்துறை அமைச்சர் ரூ.3 லட்சம் உதவி

மேட்டூர்: நங்கவள்ளி குட்டையில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவ, மாணவியர் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்பு, வாங்க மறுத்து உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அமைச்சரின் முயற்சியால் இறந்தவர் குடும்பத்துக்கு நிதியு-தவி அளிக்கப்பட்டதால், உடலை பெற்று சென்றனர்.சேலம், நங்கவள்ளி ஒன்றியம், வீரக்கல் ஊராட்சி, காலனியை சேர்ந்த சிவலிங்கம் மூத்தமகள் தனியார் கல்லுாரி மாணவி சிவ-நந்தினி, 20; இவரது தம்பி அரசு பள்ளி மாணவர் சிவகிரி, 10. அருகில் வசிக்கும் பெயின்டர் முனுசாமி மகள் ஜீவதர்சினி, 14: நேற்று முன்தினம் மற்றொரு சிறுமியுடன், மூவரும் அருகிலுள்ள கொக்கிகுட்டைக்கு துணி துவைத்து குளிக்க சென்றனர்.அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று முன்தினம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மதியம், 12:00 மணிக்கு மூவர் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டடனர். ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் மற்றும் போலீசார் உடலை வாங்கி செல்லும்படி கூறினர். அதற்கு உறவினர்கள், 'காலனிக்கு மூன்று மாதமாக குடிநீர் இணைப்பு வழங்காமல் பஞ்., நிர்வாகம் இழுத்தடித்ததால் பொதுமக்கள், மாணவ, மாணவியர் குட்டைக்கு சென்று துணி துவைத்து, குளிக்கும் நிலை ஏற்பட்டது. மேட்டூரில் அணை இருந்தும் நாங்கள் நீருக்காக அலைய வேண்டிய அவலம் உள்-ளது. அதற்கு காரணமாக நங்கவள்ளி பி.டி.ஓ., வீரக்கல் ஊராட்சி தலைவர், செயலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.பலியான மாணவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இழப்பீடு கிடைக்க நட-வடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதனை ஏற்க மறுத்த பெற்றோர், உறவினர்கள், காலனி மக்கள் நேற்று மாலை வரை மாணவர்கள் உடலை வாங்காமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மாலை, 6:00 மணிக்கு சாலை மறியலில் ஈடு-பட சென்றனர். அவர்களிடம் மீண்டும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், வீரக்கல் ஊராட்சி செயலர் பிரபாகரன் கரிக்காப்பட்டி ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கரிக்-காப்பட்டி செயலர் கோகுல், வீரக்கல் ஊராட்சிக்கு உள்ளாட்சி நிர்-வாகம் இடமாற்றம் செய்தது.சுற்றுலாத்துறை அமைச்சர் இரங்கல்இதற்கிடையில், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று இரவு, 7:30 மணிக்கு சம்பவ இடத்துக்கு சென்று, இறந்த மூவருக்கும் மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின், இறந்தவர்களின் குடும்பத்துக்கு உதவி தொகை-யாக தலா, ரூ. 1 லட்சம் வீதம் பெற்றோர்களிடம் காசோலை வழங்கினார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தினக்கூலி அடிப்-படையில், ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார்.சேலம் எம்.பி., செல்வகணபதி உடனிருந்தார். இதையடுத்து இரவு, 8:15 மணிக்கு உடல்களை அடக்கம் செய்வதற்காக உறவி-னர்கள் எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி