உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அணை வலதுகரை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

அணை வலதுகரை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மேட்டூர், மேட்டூர் - கொளத்துார் நெடுஞ்சாலையோரம், அணை வலதுகரை பவளவிழா கோபுரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணியர் செல்கின்றனர். அவர்கள் சாலையோர கடைகளில் உணவு, வறுத்த மீன் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். அதற்கு, வலதுகரை செல்லும் சாலையோரத்தில், 10 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து சாலையோரம் பல வியாபாரிகள், கடைகள் அமைக்க கூரைகளை கட்டினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார் சென்றதால், நேற்று மேட்டூர் போலீசார் பாதுகாப்பு அளிக்க, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், வியாபாரிகளை வெளியேற்றி, அனைத்து கடைகளையும் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ