புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு மீண்டும் அகற்றம்
புது பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்புமீண்டும் அகற்றம்சேலம், நவ. 16-------சேலம் புது பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் சில கடைக்காரர்கள், ஒதுக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடங்களில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள், இரு நாட்களுக்கு முன் மேற்கூரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்தும் மீண்டும் கழிவுநீர் கால்வாய் வரை ஆக்கிரமிப்பு செய்து, இரு கடைகள் நடத்தப்பட்டன. இதுகுறித்த புகார்படி நேற்று முன்தினம், மேற்கூரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை, பொக்லைன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.