கொடிக்கம்பங்கள், பீடங்கள் அகற்றம்
கெங்கவல்லி, தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை, நகராட்சி, ஊராட்சி பகுதி களில் உள்ள பொது இடங்களில் நிறுவப்பட்ட அரசியல், ஜாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பம், பீடங்களை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில், பல்வேறு கொடிக்கம்பம், பீடங்களை, சம்பந்தப்பட்டவர்கள் அகற்றிக்கொண்டனர். சில இடங்களில் அகற்றப்படாமல் இருந்தன. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் நேற்று, தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட், உடையார்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில், 36 கொடிக்கம்பங்கள், பீடங்களை அகற்றினர்.