குடிசை ஆக்கிரமிப்பு அகற்றம்
குடிசை ஆக்கிரமிப்பு அகற்றம்தலைவாசல், அக். 30-தலைவாசல் அருகே வீரகனுார் டவுன் பஞ்சாயத்து துர்கை அம்மன் கோவில் அருகே பொது கழிப்பிடம் இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து குடிசை அமைத்து பயன்படுத்தி வந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள், கடந்த, 25ல், டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் நேற்று, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவுப்படி, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன், குடிசை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டன.