உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழைநீர் ஓடையை துார்வார கோரிக்கை

மழைநீர் ஓடையை துார்வார கோரிக்கை

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்-ளது. அப்பகுதியில் பொழியும் மழைநீர், நிலவாரப்பட்டி, தாசநா-யக்கன்பட்டி வழியே பாய்ந்து செல்கிறது.சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையை கடந்து, தாசநாயக்கன்பட்டி செல்லும் மழைநீர் ஓடையில், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி, குப்பை, சேறு, சகதி நிறைந்து காணப்படுகின்றன.கனமழை காலங்களில் அதிகளவில் தண்ணீர் வரும்போது ராஜேஸ்வரி நகர் அருகே பாலத்தின் கீழ் குப்பை அடைத்துக்-கொள்வதால், குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து விடுகி-றது. ஓடை நிரம்பி ராஜேஸ்வரி பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'மழைநீர் ஓடை ஆழமின்றி உள்ளது. கனமழை பெய்யும்போது, ஓடை நிரம்பி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்து விடுகிறது. தாசநாயக்கன்பட்டியில் தனியார் பள்ளி அருகே உள்ள தடுப்பணை, மழைநீர் ஓடையை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ