உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உபரிநீர் திட்டப்பணியை விரைவுபடுத்த கோரிக்கை

உபரிநீர் திட்டப்பணியை விரைவுபடுத்த கோரிக்கை

மேட்டூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மேட்டூர், ஓமலுார், காடை-யாம்பட்டி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. அதில் விவ-சாயிகள் பேசியதாவது:நவப்பட்டி நாகராஜ்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் பாச-னத்துக்கு செல்லும் தண்ணீரை, கரையோரம் உள்ள சீமை கரு-வேல மரங்கள் தடுக்கின்றன. வெட்டி அகற்ற வேண்டும்.நவப்பட்டி சதாசிவம்: நவப்பட்டியில் மாதையன்குட்டை முதல் செக்கானுார் வரை, 50 ஏக்கருக்கு மேல் கால்வாய் நீர் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களில் தற்போது, 20க்கும் மேற்பட்ட பல்கர் டேங்கர் தயாரிப்பு கூடங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் சாகுபடி குறைந்துள்ளது. அவற்றை ஒழுங்குப-டுத்த வேண்டும்.சேலம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன்: மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் மூலம் மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி, ஓமலுார் பகுதிகளில், 100 ஏரி-களில் பாசனத்துக்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், நீர் நிரப்பும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை