உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகைக்கடன் கிராமுக்கு ரூ.6,000 வழங்க கோரிக்கை

நகைக்கடன் கிராமுக்கு ரூ.6,000 வழங்க கோரிக்கை

சேலம், கூட்டுறவு சங்க பணியாளர் அசோசியேஷன்(பேக்சியா) சேலம் மாவட்ட செயலர் அன்பு தலைமையில் நிர்வாகிகள் நேற்று, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் குழந்தைவேலுவிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து அன்பு கூறியதாவது:மத்திய கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் கிராமுக்கு, 5,600ல் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தியதை போன்று, தொடக்க வேளாண் கடன் சங்கம், நகர கடன் சங்கம், லேம்ப், குடியேற்ற சங்கங்களிலும் உயர்த்தி வழங்க அனுமதிக்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி, நகைகளை பெற்றுக்கொண்டு வழங்கும் நகைக்காசு கடனை, கடன் சங்கங்களுக்கு உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் டிபாசிட் தொகையில், 25 சதவீதம், மத்திய கூட்டுறவு வங்கியில் டிபாசிட் செய்யப்படுகிறது. அதில் டிபாசிட் தொகைக்கு ஏற்ப, 25 சதவீதம் போக, மீதி தொகையை, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என முறையிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை