உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிரஷர், ஜல்லி விலை உயர்வு அமைச்சரிடம் கோரிக்கை

கிரஷர், ஜல்லி விலை உயர்வு அமைச்சரிடம் கோரிக்கை

சேலம், டிச. 2-நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின், சேலம் மாவட்ட தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.தொடர்ந்து சுப்பிரமணி கூறியதாவது:சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட, 6 மாவட்டங்களில் குவாரி உரிமையாளர்கள் கட்டுமானப்பணிக்கு தேவையான கிரஷர், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவற்றின் விலையை, தன்னிச்சையாக முடிவெடுத்து உயர்த்தியுள்ளனர். இதனால் பல்வேறு கட்டடங்கள், கட்டி முடிக்க முடியாமல் அப்படியே உள்ளன. ஓராண்டில் மட்டும், 3 முறை விலை ஏற்றியது கண்டிக்கத்தக்கது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கும், தொழிலாளிகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, அமைச்சரிடம் மனு அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி