உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை

மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் முத்துமலை பாலதண்டாயுத-பாணி கோவிலில் நேற்று, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வந்தார். அங்கு முருகனை தரிசித்த அவர், அன்னதா-னத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பனமரத்துப்பட்டி ஏரியை பார்வையிட்டார். அப்போது, குரால்நத்தம் மக்கள், விவசாயிகள், 'முத்தானுாரில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் பள்ளி குழந்தைகள், மக்கள் சிரமப்படுகின்றனர். அங்கு, மழைநீர் ஓடையில் மேம்பாலம் கட்ட வேண்டும். பனம-ரத்துப்பட்டி ஏரியை துார்வாரி, காவிரி நீரை நிரப்பி, சுற்றுலா தல-மாக்க வேண்டும்' என, அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி