மேலும் செய்திகள்
பைக் கவரில் இருந்தரூ.2.50 லட்சம் திருட்டு
04-May-2025
கெங்கவல்லி, கெங்கவல்லி, நாகியம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 55. தலைவாசலில் உள்ள தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். இவரது உறவினர், செந்தாரப்பட்டியை சேர்ந்த ராஜி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது குடும்ப பிரச்னை தொடர்பாக, தம்மம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக, தம்மம்பட்டி ஸ்டேஷனுக்கு வரும்படி, கடந்த, 19ல், உறவினர் அழைத்ததால், அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சந்திரசேகரன் வந்தார். அங்கு, 4 பேர் தகாத முறையில் பேசி தாக்கியுள்ளனர். காயமடைந்த சந்திரசேகரன், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தம்மம்பட்டி போலீசார் விசாரித்து, நாகியம்பட்டி பிரபு, 40, ராமசாமி, 41, சுரேஷ், 37, மற்றொரு சுரேஷ், 40, ஆகியோர் மீது, வன்கொடுமை உள்பட, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். அதில் நேற்று, பிரபு, ராமசாமியை கைது செய்து, மற்ற இருவரை தேடுகின்றனர்.
04-May-2025