மேலும் செய்திகள்
வன்னியர் உள்ஒதுக்கீடு: ஆராய ஓராண்டு நீட்டிப்பு
02-Aug-2025
சேலம்:வன்னியர் கூட்டமைப்பின் செயல்வீரர் கூட்டம், சேலம் சங்கர் நகரில் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலர் வெங்கடேஷன் தலைமை வகித்தார். அதில் நிறுவன தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து ராமமூர்த்தி அளித்த பேட்டி: கடந்த, 2012ல் வன்னிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை முதல்வர் ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சியால், காலம் தாழ்த்தி வருகிறார். உடனே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதேபோல் வன்னியர் நல வாரியம் அமைக்க வேண்டும். மேலும் கரியகோவில், ஆணைமடுவு அணைகளை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தலைமை நிலைய செயலர் ராம்குமார், அமைப்பு செயலர் சத்குரு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
02-Aug-2025