மேலும் செய்திகள்
பா.ஜ.,வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
22-Jan-2025
சேலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட மையம் சார்பில், ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்; வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடத்தை உடனே நிரப்பி, அதீத பணி நெருக்கடியை களைந்து, நிலுவையில் உள்ள, 9 கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோஷம் எழுப்பினர். பின் துணைத்தலைவர் அர்த்தனாரி கூறுகையில், ''ஆட்சிக்கு வந்து, 4 ஆண்டுகள் ஆகியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை இதுவரை அமல்படுத்தவில்லை. அத்துடன் காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனே வழங்க வேண்டும். பேரிடர் மேலாண் பணியிடத்தை நிரப்ப அரசு முன்வரவேண்டும்,'' என்றார். மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ், பொருளாளர் அகிலன், இணை செயலர்கள் முருகபூபதி, சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துார் தாலுகா அலுவலகம் முன் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், வட்ட கிளை தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, 'மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்றபடி புது தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலகம், மாவட்டம் பிரித்து வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்குவதற்கு தனி துணை தாசில்தார் அளவில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தாசில்தார் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.கெங்கவல்லியில் வட்ட துணைத்தலைவர் அழகேசன், மேட்டூரில் வட்ட கிளை தலைவர் பிரபாகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் பல்வேறு தாலுகாக்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
22-Jan-2025