உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வருவாய்த்துறை போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

வருவாய்த்துறை போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

சேலம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. சேலத்தில் வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து, காலை, 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள, 564 அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல்; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை, வாரத்துக்கு 2 மட்டும் நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசுகையில், 'பணி நெருக்கடி தாங்க முடியாமல் வீதிக்கு வந்து போராடுகிறோம். அரசு உணர்ந்து, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.வருவாய்த்துறை போராட்டத்தால், சேலம் மாவட்டத்தில், 14 தாலுகா, 4 ஆர்.டி.ஓ., - கலெக்டர் அலுவலக பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் தொடர்பான ஓட்டுச்சாவடி பிரித்தல், இடம் மாற்றுதல், பட்டா மாறுதல், 40 வகை சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ