கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.ஐ., பைக் திருட்டு
சேலம் :சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ், 43. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறையில், இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிகிறார். கடந்த செப்., 23ல், கலெக்டர் அலுவலக ஸ்டாண்டில், அவரது, 'பல்சர்' பைக்கை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். மாலையில் வந்தபோது, பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'கலெக்டர் அலுவலகத்தில் பைக் திருடிய மர்ம நபர், பள்ளப்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை தேடி வருகிறோம்' என்றனர்.