உரிமை மீட்பு பயணம்:எம்.எல்.ஏ., அறிவுரை
மேட்டூர்;மேட்டூர் சட்டசபை தொகுதி, பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமை வகித்து, பா.ம.க.,வில் உறுப்பினர் சேர்ப்பு பணியை துரிதப்படுத்தல்; டிசம்பரில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி, சிறை நிரப்பும் போராட்டம், அன்புமணி தலைமையில் நடக்கும் உரிமை மீட்பு பயணத்தில், மேட்டூர் தொகுதியில் இருந்து கட்சியினர் அதிகளவில் பங்கேற்க அறிவுரை வழங்கினார்.எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர் துரைராஜ், இளைஞர் சங்க செயலர் ராஜசேகரன், துணை செயலர் தமிழ்வாணன், மேட்டூர் நகர செயலர் மதியழகன், தலைவர் சந்திரசேகரன், கொளத்துார், மேச்சேரி ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.