உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் செல்ல சாலை வசதி அவசியம்

காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் செல்ல சாலை வசதி அவசியம்

ஓமலுார்,காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு செல்ல, முறையான சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகாவை பிரித்து, 2016, பிப்.,27ல், காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் உருவானது. சிறிய கரடு அருகே அரசு நிலத்தில், தாலுகா அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.ஆனால், அதற்கான பிரதான சாலை என்பது கட்டடத்தின் பின்புறம் உள்ள, காடையாம்பட்டி டவுன் பஞ்.,அலுவலகம் அருகே உள்ள வழியை பயன்படுத்திட வேண்டும்.ஆனால் பலரும், அரசு மருத்துவமனை எதிரே உள்ள வழியை பயன்படுத்தி. தனியார் பட்டா நிலத்தில் கடந்து அலுவலகம் வருகின்றனர். தற்போது அப்பகுதியில், புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டதால், நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.இதனால், தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் வழியில், அந்தந்த பட்டாதாரர்கள் கம்பி வேலி போட்டுள்ளனர். இதனால் மக்கள் குறுக்கு நெடுக்குமாக சாலையை கடந்து செல்கின்றனர்.மண் சாலையாக உள்ளதால், மழை காலங்களில் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், காடையாம்பட்டி தாலுகா அலுவலத்துக்கு செல்லும் வழியை முறைப்படுத்தி, தார்ச்சாலையாக அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை