குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஆத்துார்: ஆத்துார், புதுப்பேட்டையை சேர்ந்த பெண்கள் நேற்று காலை, 8:30 மணிக்கு, அங்குள்ள உழவர் சந்தை பஸ் ஸ்டாப் பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் நெடுஞ்சாலை போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது நகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டு தீர்வு காண போலீசார் அறிவுறுத்தினர். இதனால், 8:50 மணிக்கு கலைந்து சென்ற பெண்கள், ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சையதுமுஸ்தபா கமாலிடம் மனு அளித்தனர். அப்போது, '10 முதல், 15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்வதில்லை' என்றனர். கமிஷனர், 'சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என்றார். பின் அனைவரும் சென்றனர்.