மேலும் செய்திகள்
31ல் கவுன்சிலர் கூட்டம்
29-Oct-2025
சேலம்:சேலம் மாநகராட்சி பகுதிகளில், 37.03 கோடி ரூபாய் மதிப்பில், சாலை மேம்பாடுப்பணிகளை, அமைச்சர் ராஜேந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், மாநில நிதிக்குழு மானியம், சிறப்பு நிதி திட்டம் என, 37.03 கோடி ரூபாய் மதிப்பில், 63.63 கி.மீ., நீளத்துக்கு, 390 சாலை மேம்பாடு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் உரிய கால அளவில் முடித்து மக்கள் பயன்பாடுக்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
29-Oct-2025