சாலை பாதுகாப்பு பைக்கில் பேரணி
நங்கவள்ளி: சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள் சார்பில் விழிப்புணர்வு பைக் பேரணி நேற்று நடந்தது. நிலைய அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். நங்கவள்ளி பஸ் ஸ்டாண்ட், தேர்வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில், பைக்கில் வலம் வந்த தீயணைப்பு வீரர்கள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியபடி சென்றனர்.அதேபோல் காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், சாலை பாது-காப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நடந்து சென்று, கடை, வீடுகள், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்-கினர். வாரச்சந்தை பகுதியில், நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையில் வீரர்கள், பைக் பேரணி நடத்தினர்.