உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருட முயன்றவர் சுற்றிவளைப்பு

திருட முயன்றவர் சுற்றிவளைப்பு

சேலம், சேலம், பெரிய சீரகாபாடி, சடையாண்டி ஊத்து கோவில் அடிவாரத்தை சேர்ந்தவர் ரவி, 48. இவர், வீட்டில் விசைத்தறி வைத்து தொழில் செய்கிறார். வீட்டின் மற்றொரு அறையில், நேற்று காலை, 11:00 மணிக்கு புகுந்த, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் புகுந்து, பீரோவை உடைக்க முயன்றார். இதை பார்த்த ரவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அவரை பிடித்து, ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் சட்டீஸ்கரை சேர்ந்த திலீப் டாப்போ, 40, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை