போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ஆத்துார்: காதல் திருமணம் செய்த ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்தனர்.ஆத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்த வேல்முருகன் மகள் திவ்யா, 19. இவர், பெரம்பலுார் தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பூபதி மகன் விக்ரம், 22, பட்டப்படிப்பு முடித்த இவர், பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள், இரண்டு ஆண்டுகளாக காத-லித்து வந்தனர்.இவர்களது காதல் விவகாரம் அறிந்த இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 18ல், வீட்டை விட்டு வெளியே-றிய இவர்கள், புத்துார் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு மாணவி திவ்யா, விக்ரம் ஆகியோர் தலைவாசல் போலீசில் தஞ்சமடைந்தனர்.இருவீட்டு பெற்றோரையும் வரவழைத்து, போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். மாணவியின் பெற்றோர், திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் செய்த விக்ரமுடன், மாணவி திவ்யாவை அனுப்பி வைத்தனர்.